Asianet News TamilAsianet News Tamil

வருடத்திற்கு 12 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது சவாலான காரியம் - பி.வி.சிந்து ஓபன் டாக்

It is challenging to play 12 matches per year - PV Sindhu Open talk
It is challenging to play 12 matches per year - PV Sindhu Open talk
Author
First Published Dec 27, 2017, 10:59 AM IST


முன்னணி வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டில் குறைந்தபட்சம் 12 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது சவாலான காரியம்தான் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நேற்று நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில் இந்திய பாட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து, "இங்கிலாந்து ஓபன் சாம்பியின்ஷிப் போட்டியை அனைத்து வீரர்களும் கௌரமிக்க போட்டிகளில் ஒன்றாக கருதுகிறோம் என்பதால், புதிய விதிமுறையை வேறு ஒரு சரியான நேரத்தில் அறிமுகப்படுத்தி இருக்கலாம்.

என்னை பொருத்தவரை இதை மிகப் பெரிய பிரச்சனையாகக் கருதவில்லை. நாம் பயிற்சியில் ஈடுபட்டால் புதிய விதிமுறைப்படி, சர்வீஸ் செய்ய முடியும்.

முன்னணி வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டில் குறைந்தபட்சம் 12 போட்டிகளில் விளையாட குறித்து "அடுத்த காலண்டர் தொடங்கிவிட்டது. இனிமேல் விளையாட முடியாது என்று கூற முடியாது. உண்மையில், 12 போட்டிகளில் விளையாட வேண்டும் என்பது சவாலான காரியம்தான்" என்று கூறினார்.
 
மேலும், ஆசிய விளையாட்டுப் போட்டி, காமன்வெல்த், உலக சாம்பியன்ஷிப் உள்ளிட்ட முக்கிய போட்டிகள் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளன. ஒவ்வொரு போட்டியிலும் கலந்துகொள்வது குறித்து எனது பயிற்சியாளருடன் கலந்தாலோசனை நடத்தி திட்டம் வகுப்பேன்" என்று சிந்து தெரிவித்து இருந்தார்.

முன்னதாக, முன்னணி வீரர், வீராங்கனைகள் அடுத்த ஆண்டில் 12 போட்டிகளில் கலந்து கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாடு அவர்களுக்கு நெருக்கடியை அளிக்கும் என்று இந்திய பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் கருத்து தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios