ISL update Pune and Mumbai teams face today Well done on your own soil ...
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் புணே மற்றும் மும்பை அணிகள் இன்று புணேயில் மோதுகின்றன.
இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் எஃப்சி புணே சிட்டி மற்றும் மும்பை சிட்டி எஃப்சி அணிகள் இன்று புணேயில் மோதுகின்றன.
புணே அணி தனது முதல் ஆட்டத்தில் 2-3 என்ற கோல் கணக்கில் டெல்லி டைனமோஸ் அணியிடம் வீழ்ந்தது.
இதேபோல், பெங்களூரு எஃப்சி அணிக்கு எதிராக தனது முதல் ஆட்டத்தில் 2-0 என்ற கோல் கணக்கில் மும்பை அணி வீழ்ந்தது.
எனினும், இரண்டாவதாக அட்லெடிகோ டி கொல்கத்தா அணியை 1-4 என்ற கோல் கணக்கில் புணே வீழ்த்தி லீக் சுற்றில் முதல் வெற்றியை பெற்றது.
இதேபோல மும்பை அணி, டெல்லி டைனமோஸை 4-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்தது.
மும்பை - புணே அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் இன்று மோத உள்ளன. புணே நகரில் இந்த ஆட்டம் நடைபெறவுள்ளதால் உள்ளூர் ரசிகர்களின் ஆதரவு புணே அணிக்கு கிடைக்கும். இதனால், அதிக உற்சாகத்துடன் அந்த அணி மும்பை அணியை எதிர்கொள்ளும்.
