ISL updat mumbai was defeated by pune
ஐஎஸ்எல் கால்பந்தாட்டப் போட்டியின் 11-வது ஆட்டத்தில் மும்பை அணியை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி சொந்த மண்னில் தனது பெயரை காப்பாற்றி கொண்டது புணே அணி .
இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியின் 11-வது ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணியும், மும்பை சிட்டி எஃப்சி அணியும் நேற்று மோதின.
புணேவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் மும்பை அணி 15-வது நிமிடத்திலும், புணே அணி 74-வது மற்றும் 90-வது நிமிடத்திலும் கோல்கள் அடித்தன.
இதில் மும்பை அணிக்கான கோலை பல்வந்த் சிங் அடிக்க, புணேவுக்கான கோல்களை அந்த அணியின் எமிலியானோ அல்ஃபாரோ அடித்தார்.
இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதலே மும்பை ஆதிக்கம் செலுத்தியது. ஆனால், பிற்பாதி ஆட்டத்தில் புத்துணர்ச்சி பெற்ற புணே அணி தனது கோல் கணக்கை தொடங்கி ஆட்டத்தை சமன் செய்தது.
பின்னர், ஆட்டத்தின் இறுதியில் 2-வது கோல் அடித்து வெற்றியை தன் வசம் இழுத்தது.
