isl Bengaluru lost with chennai

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியின் 26-வது ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணி 2-1 என்ற கோல் கணக்கில் பெங்களூரு எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்தாட்டப் போட்டியின் 26-வது ஆட்டம் பெங்களூரில் நேற்று நடைபெற்றது.

இந்த ஆட்டத்தில் சென்னை வீரர் ஜிஜி லால்பெக்லுவா 5-வது நிமிடத்தில் கோல் அடித்து, முதல் பாதியில் அணியை முன்னிலைப்படுத்தினார்.

இரண்டாவது பாதியில் பெங்களூரு வீரர் சுனில் சேத்ரி 85-வது நிமிடத்தில் கோலடித்து ஆட்டத்தை சமன் செய்தார். விறு விறுப்பாக நடைப்பெற்ற இறுதி கட்ட ஆட்டத்தில் சென்னை வீரர் தனபால் கணேஷ் 88-வது நிமிடத்தில் கோலடித்து அணியை வெற்றி பெறச் செய்தார்.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டப் போட்டியில் பெங்களூருவை அதன் சொந்த மண்ணில் 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி வெற்றிப் பெற்றுள்ளது சென்னையின் எஃப்சி அணி.

இதனிடையே, நேற்று மும்பையில் நடைபெற்ற 27-வது ஆட்டத்தில் அட்லெடிகோ டி கொல்கத்தா அணி 1-0 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி எஃப்சி அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தியது என்பது குறிப்பிடத்தக்கது.