ஹெலிகாப்டர் ஷாட் என்றாலே தோனி தான் நினைவுக்கு வருவார். யார்க்கர் மற்றும் ஃபுல் லெந்த் பந்துகளை ஹெலிகாப்டர் ஷாட் மூலம் தோனி சிக்ஸருக்கு அனுப்புவதை ரசிக்காத கிரிக்கெட் ரசிகரே இருக்க முடியாது.

பொதுவாக போட்டியின் கடைசி ஓவர்களில் அதிரடியாக ஆடும் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த யார்க்கர் பந்துகளை பவுலர்கள் வீசுவது வழக்கம். யார்க்கர் மூலம் பேட்ஸ்மேனை கட்டுப்படுத்த முடியும் என்ற இலக்கணத்தை, ஹெலிகாப்டர் ஷாட் மூலம் உடைத்தவர் தோனி.

தற்போது தோனியை தவிர வேறு வீரரால் ஹெலிகாப்டர் ஷாட்டை நேர்த்தியாக ஆடமுடியாது என்று நினைத்தவர்களுக்கு, இப்போது இந்தியாவிலேயே ஒரு வீரர் கிடைத்துவிட்டார். ஆம்.. இஷான் கிஷான் தான் அந்த வீரர்.

ஐபிஎல் தொடரில் மும்பை அணிக்காக ஆடிவரும் இஷான் கிஷான், கொல்கத்தாவுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அதிரடியாக ஆடி 21 பந்துகளில் 62 ரன்களை குவித்தார். இதில் 6 சிக்ஸர்கள் அடங்கும். அந்த 6 சிக்ஸர்களில் ஒன்று ஹெலிகாப்டர் ஷாட். 

குல்தீப் யாதவ் வீசிய 14வது ஓவரில் இஷான் கிஷான் தொடர்ச்சியாக 4 சிக்ஸர்கள் விளாசினார். அதில் கடைசி சிக்ஸர் ஹெலிகாப்டர் ஷாட். 14வது ஓவரின் கடைசி பந்தை தோனியின் ஸ்டைலில் சிக்ஸருக்கு பறக்கவிட்டார் இஷான் கிஷான். இடது கை பேட்ஸ்மேனான இஷான் கிஷானின் ஹெலிகாப்டர் ஷாட், ரசிகர்களை வியக்கவைத்தது. 

<blockquote class="twitter-tweet" data-lang="en"><p lang="en" dir="ltr">A hint of MSD in Ishan Kishan <a href="https://t.co/SDaXQUeDkf">https://t.co/SDaXQUeDkf</a> via <a href="https://twitter.com/IPL?ref_src=twsrc%5Etfw">@ipl</a></p>&mdash; Sports Freak (@SPOVDO) <a href="https://twitter.com/SPOVDO/status/994253634954145792?ref_src=twsrc%5Etfw">May 9, 2018</a></blockquote>
<script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script>

தோனியின் ஹெலிகாப்டர் ஷாட்டின் மிரர் வியூவாக அது அமைந்தது. இஷானின் ஹெலிகாப்டர் ஷாட் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.