Is this Indian team at the International Football Rankings?
சர்வதேச கால்பந்து தரவரிசையில் இந்திய அணி 105-வது இடத்தில் உள்ளது. இதற்குமுன் இந்தியா 107-வது இடத்தில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
சர்வதேச கால்பந்து தரவரிசையில் 107-வது இடத்தில் இருந்த இந்திய அணி இரண்டு இடங்கள் முன்னேறி 105-வது இடத்தை பிடித்துள்ளது.
கடந்த வாரம் நடைபெற்ற ஆசிய கோப்பை தகுதிச் சுற்றில் சிறப்பாக ஆடியதன் அடிப்படையில் இந்திய அணி தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளது.
அதேசமயத்தில் ஆசிய தரவரிசையில் இந்திய அணி 14-வது இடத்தில் உள்ளது.
கடந்த 11-ஆம் தேதி நடைபெற்ற ஆசிய கோப்பை போட்டிக்கான தகுதிச் சுற்றில் இந்திய அணி 4-1 என்ற கோல் கணக்கில் மக்காவ் அணியை வீழ்த்தியதன்மூலம் ஆசிய கோப்பை போட்டியில் பங்கேற்க இந்தியா தகுதி பெற்றது என்பது கொசுறு தகவல்.
