Irfan has not informed about the ban gamblers a year This is the verdict of the Pakistan Cricket Board
சூதாட்டக்காரர்கள் பற்றி புகார் தெரிவிக்காத பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்ஃபானுக்கு ஓரு வருடம் விளையாட தடை விதித்துள்ளது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம்.
பாகிஸ்தான் சூப்பர் லீக் டி-20 போட்டியில் விளையாடியபோது ஸ்பாட் ஃபிக்ஸிங்கில் ஈடுபடுமாறு சூதாட்டத் தரகர்கள் முகமது இர்ஃபானை அணுகியுள்ளனர்.
ஆனால், இர்ஃபான் இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்திடம் புகார் தெரிவிக்காமல் இருந்துள்ளார்.
இதனால் கடுப்பான பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவருக்கு ஒரு வருடம் விளையாட தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக இர்ஃபான் கூறியது:
“இரண்டு குற்றச்சாட்டுகளின் கீழ் கடந்த 14-ஆம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் என்னை சஸ்பெண்ட் செய்ததை அனைவரும் அறிவீர்கள். அதில் ஒன்று, சூதாட்டத் தரகர்கள் என்னை அணுகியது குறித்து கிரிக்கெட் வாரியத்திடம் தெரிவிக்காதது. அது எனது தவறுதான்.
சூதாட்டத் தரகர்கள் அணுகினால் அது தொடர்பாக உடனடியாக கிரிக்கெட் வாரியத்தின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் விதிமுறையில் தெளிவாக இருக்கிறது. ஆனால் நான் அதை செய்யவில்லை. அதற்காக நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோருகிறேன். அவர்களும் என்னை மன்னிப்பார்கள் என நம்புகிறேன்' என கூறினார்.
