IPL2022 :RR VS PBKS: ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹலும், ஜாஸ் பட்லரும் சேர்ந்து நடமானாடும் காட்சிகள் இன்ஸ்டாவில் பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளன.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் யஜுவேந்திர சஹலும், ஜாஸ் பட்லரும் சேர்ந்து நடமானாடும் காட்சிகள் இன்ஸ்டாவில் பெரும்வரவேற்பைப் பெற்றுள்ளன.

ஐபிஎல்டி20 போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 6ல் வென்று 12 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் இருக்கிறது. இன்று பிற்பகலில் நடக்கும் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மோதுகிறது. 

இதில் ராஜஸ்தான் அணியின் சுழற்பந்துவீச்சாளர் யஜுவந்திர சஹல் அவ்வப்போது நடனமாடும் வீடியோக்களை எடுத்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வைரலாக்கி வருகிறார். ஹாட்ரிக் விக்கெட் எடுத்தபோது, மைதானத்தில் ஒய்ராமாக படுத்து போஸ் கொடுத்து அதை சஹல் வைரலாக்கினார். அதன்பின் தனது மனைவியுடன் நடமானடும் வீடியோவை இன்ஸ்டாவில் சஹல் பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் ராஜஸ்தான் அணியின் சகவீரரும், இங்கிலாந்து வீரரான ஜாஸ் பட்லருடன் சேர்ந்து சஹல் நடனமாடும் வீடியோ இன்ஸ்டாவில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

எந்த பாடலுக்கு என்றால், சமீபத்தில் தனஸ்ரீ வர்மா மற்றும் அபர்சக்தி குர்னாவின் பல்லே நீ பல்லே பாடலுக்கு இருவரும் நடமானடிதான் கலக்கியுள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஜெர்ஸியை அணி்து இருவரும் பாடலுக்கு நடனமாடி கடைசியில் சஹலின் ஃபேவரெட் போஸில் பாடலை முடிப்பது ரசிக்கும் வகையில் இருக்கிறது

View post on Instagram

இந்த வீடியோ தனஸ்ரீ வர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்தவீடியோவை இதுவரை 10 லட்சம் பேர் பார்த்துள்ளனர். இன்ஸ்டாவில் பதிவிட்ட கருத்தில் “ ஜாஸ், சஹல் இருவரும் பல்லே நீ பல்லை பாடலுக்கு நடனமாடினர். இந்த சீசனில்இதுதான் சிறந்த கூட்டணியா?” எனத் தெரிவித்துள்ளார்.

அபர்சக்தி குரானா, தனஸ்ரீ வர்மா இருவரும் பகிர்ந்த கருத்தில் “ இதுவரை சிறந்த ரீல்ஸ் என்றார் இதுதான்…ஹாஹாஹாஹா. எனக்குபிடித்தான ரீல்ஸ்”என இருவரும் பதிவி்ட்டுள்ளனர்