ரசிகர்களின் உணர்ச்சிகளோடு ஒன்றோடு ஒன்றாக கலந்துவிட்ட பத்தாவது ஐபிஎல் கிரிக்கெட் ஐதராபாதில் இன்றுத் தொடங்குகிறது.

47 நாள்கள் நடைபெறும் இந்த ஐபிஎல் தொடரில் 60 ஆட்டங்கள் இடம் பெறுகின்றன. இறுதி ஆட்டம் மே 21-ஆம் தேதி ஐதராபாதில் நடைபெறுகிறது.

டெல்லி டேர்டெவில்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், குஜராத் லயன்ஸ், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ், மும்பை இண்டியன்ஸ், பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் ஆகிய 8 அணிகள் இதில் பங்கேற்கின்றன.

கேப்டன்கள், பயிற்சியாளர்கள், என அனைத்து விதத்திலும் புதுமையை ரசிகர்களுக்கு பரிசாக அளிக்க வருகிறது இந்த ஐபிஎல்.

ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரக நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் முதல்முறையாக ஐபிஎல் போட்டியில் பங்கேற்கிறார்கள்.

கோலி, டிவில்லியர்ஸ், அஸ்வின் போன்ற அதிரடி ஆட்டக்காரர்கள் இல்லாமல் இந்த ஐபிஎல் தொடங்குகிறது

எனினும், கிறிஸ் கெயில், பிரென்டன் மெக்கல்லம், மேக்ஸ்வெல், தோனி, ரெய்னா, யுவராஜ் சிங், டுவைன் பிராவோ, டுவைன் ஸ்மித், ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் மில்லர், டேவிட் வார்னர், இயான் மோர்கன், போலார்ட் என ஏராளமான அதிரடி பேட்ஸ்மேன்கள் இருப்பதால் இந்த முறையும் அசத்தலான ஆட்டம் விருந்தாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.