IPL 2018 Umpire Makes Bizarre No-Ball Decision During Kolkata Knight Riders vs Mumbai Indians Match
கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியின் போது “இல்லாத நோ பாலை, நோ பால்” என்று நடுவர் கூறியதால், அது தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை-கொல்கத்தா அணிகளுக்கிடையேயான 41-வது லீக் போட்டியில் மும்பை அணி 102 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் புள்ளிப் பட்டியலில் முன்னேறியுள்ள மும்பை, வலுவான ரன் ரேட்டுடனும் உள்ளது.
இந்நிலையில் இப்போட்டியின் போது கொல்கத்தா அணி வீரர் டாம் கரண் வீசிய 16-வது ஓவரின் 5-வது பந்தை நடுவரான கே.என். அனந்த நோ பால் என்று அறிவித்தார். இதனால் அதற்கு ப்ரீ ஹீட்டும் கொடுக்கப்பட்டது. ஆனால் டிவி ரீப்ளேவில் அது நோ பால் இல்லை என்பது தெள்ளத் தெளிவாக இருந்தது.

இதை ஆடுகளத்திற்கு வெளியில் அமர்ந்திருந்த கொல்கத்தா அணியின் வீரர் கேமரோன் டெல்போர்ட் பவுண்டரி அருகே பீல்டிங் செய்துகொண்டிருந்த ரிங்கு சிங் மூலம், அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் மற்றும் பந்துவீச்சாளர் டாம் கரணுக்குத் தெரியப்படுத்தினார்.
இதனால் உடனடியாக தினேஷ் கார்த்திக் உடனடியாக நடுவரிடம் சென்று நோ பால் என்பது சரிதானா என்று பாருங்கள் என கூறியுள்ளார். ஆனால் அவர் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
