சர்வதேச மகளிர் பாட்மிண்டன் தரவரிசையில் இந்தியாவின் பி.வி.சிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து முன்னேறியுள்ளார்.

சர்வதேச பார்மிண்டன் குழு, ஆடவர் மற்றும் மகளிர் பாட்மிண்டன் தரவரிசை பட்டியலை வெளியிட்டது.

இதில், இந்தியாவின் பி.வி.சிந்து இரண்டாவது இடத்தைப் பிடித்து அசத்தியுள்ளார். இது அவருடைய அதிபட்ச தரவரிசையாகும்.

இவர் 75 ஆயிரத்து 759 புள்ளிகள் பெற்று 2-ஆவது இடத்தில் இருக்கிறார். ஐந்தாவது இடத்தில் இருந்த சிந்து மூன்று இடங்கள் முன்னேறி இந்த இடத்தைப் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச தரவரிசையில் முதல் ஐந்து இடங்களுக்குள் முன்னேறிய 2-ஆவது இந்திய வீராங்கனை பி.வி.சிந்து ஆவார்.

கடந்த வாரம் நடைபெற்ற இந்திய ஓபன் சூப்பர் சீரிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்றர் சிந்து. இந்த வெற்றியின் மூலம் தரவரிசையில் நல்ல முன்னேற்றம் கண்டுள்ளார்.

மற்றொரு இந்திய வீராங்கனையான சாய்னா நெவால் ஓர் இடத்தை இழந்து 9-ஆவது இடத்திற்கு சென்றார்.