Harika won the bronze medal third time
உலக மகளிர் செஸ் போட்டியில் இந்தியாவின் ஹரிகா துரோணவல்லி தொடர்ந்து மூன்றாவது முறையாக வெண்கலம் வென்று அசத்தியுள்ளார்.
ஈரான் தலைநகர் டெஹ்ரானில் நடைபெற்று உலக மகளிர் செஸ் போட்டியின் அரையிறுதியில் டைபிரேக்கர் முறையில் சீனாவின் டேன் ஜாங்கியிடம் தோல்வியடைந்தார் ஹரிகா.
இதனால் இறுதிச் சுற்று வாய்ப்பை இழந்த ஹரிகா, வெண்கலப் பதக்கத்தோடு வெளியேறினார்.
டைபிரேக்கர் சுற்றில் ஹரிகா தனக்கு கிடைத்த ஏராளமான வாய்ப்புகளை கோட்டைவிட்டாலும் அவர் வெண்கலத்தை கோட்டைவிட வில்லை.
டேன் ஜாங்கி தனது இறுதிச் சுற்றில் உக்ரைனின் அன்னா முஜிசுக்கை சந்திக்கிறார்.
