Muhamed Husamudeen ahead to finals
சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் ஆடவர் 56 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் முகமது ஹுஸாமுதீன் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியதன் மூலம் வெள்ளிப் பதக்கத்தை உறுதி செய்தார்.
பல்கேரிய தலைநகர் சோபியாவில் சர்வதேச குத்துச்சண்டை போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் அரையிறுதியில் முகமது ஹுஸாமுதீன், பல்கேரிய வீரர் ஸ்டீஃபன் இவானோவைத் தோற்கடித்தார்.
அரையிறுதியில் வெற்றி பெற்றதன் மூலம் அவர் வெள்ளிப்பதக்கத்தை உறுதி செய்தார்.
மேலும், முகமது ஹுஸாமுதீன் தனது இறுதிச் சுற்றில் உக்ரைனின் மைகோலா பட்சென்கோவை சந்திக்கிறார்.
