Indias Velan semi-final progress
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அசத்தலாக ஆடி இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் அரையிறுதிக்கு முன்னேறினார்.
வெஸ்ட் ரேன்ட் ஓபன் ஸ்குவாஷ் போட்டி, தொழில்முறை வீரர்கள் ஸ்குவாஷ் சங்கத்தின் (பிஎஸ்ஏ) சார்பில் தென் ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடைபெற்று வருகிறது.
இந்தப் போட்டியின் புதன்கிழமை நடந்த ஆட்டத்தில் காலிறுதியில் வேலவன் - போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருந்த இங்கிலாந்தின் லையீட் புல்லாருடன் மோதினார்.
இதில், 7-11, 11-5, 11-3, 11-6 என்ற செட் கணக்கில் புல்லாரை வீழ்த்தினார் வேலவன்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியரான ஹரிந்தர் பால் சாந்து – எகிப்தின் முகமது எல்ஷெர்பினுடன் மோதினார்.
இதில் 10-12, 11-9, 7-11, 10-12 என்ற செட் கணக்கில் முகமதுவிடம் தோல்வி கண்டு போட்டியிலிருந்து வெளியேறினார் ஹரிந்தர்.
