நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஆடிவரும் இந்திய அணி, ஆஸ்திரேலிய சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு அப்படியே நியூசிலாந்து செல்கிறது. அங்கு 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3 ஒருநாள் மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் ஆகியவற்றிற்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான ஒருநாள் அணியில் இடம்பெற்றிருந்த ரிஷப் பண்ட், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர், உலக கோப்பைக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது. இந்த தொடர்களில் இடம்பெற்றுள்ள வீரர்கள்தான் உலக கோப்பைக்கான அணியில் இடம்பெறுவர். இந்நிலையில், சூழலை புரிந்துகொண்டு அதற்கேற்றவாறு முதிர்ச்சியான ஆட்டத்தை ரிஷப் பண்ட் வெளிப்படுத்துவதில்லை. அதனால் ஒருநாள் அணியிலிருந்து நீக்கப்பட்டு தினேஷ் கார்த்திக் சேர்க்கப்பட்டுள்ளார். அதேநேரத்தில் டி20 அணியில் ரிஷப் பண்ட் சேர்கப்பட்டுள்ளார். டி20யில் தினேஷ் கார்த்திக்கும் உள்ளார். 

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு எதிரான டி20 தொடரில் நீக்கப்பட்ட தோனி நியூசிலாந்து தொடரில் அணியில் இடம்பெற்றுள்ளார். 

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணி:

விராட் கோலி(கேப்டன்), ரோஹித் சர்மா(துணை கேப்டன்), ஷிகர் தவான், கேஎல் ராகுல், ரிஷப் பண்ட், தினேஷ் கார்த்திக், கேதர் ஜாதவ், தோனி(விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, குருணல் பாண்டியா, குல்தீப் யாதவ், சாஹல், புவனேஷ்வர் குமார், பும்ரா, கலீல் அகமது.