நியூசிலாந்துக்கு எதிரான நான்காவது போட்டியில் இந்திய அணி அடைந்த தோல்வி, இந்திய கிரிக்கெட் வரலாற்றில் அடைந்த மிகப்பெரிய தோல்வி. 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் மூன்று ஒருநாள் போட்டிகளில் வென்று இந்திய அணி தொடரை வென்றுவிட்ட நிலையில், நான்காவது போட்டி ஹாமில்டனில் இன்று நடந்தது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி, டிரெண்ட் போல்ட்டின் வேகத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. 30.5 ஓவரில் வெறும் 92 ரன்களுக்கு இந்திய அணி ஆல் அவுட்டானது. 

93 ரன்கள் என்ற எளிய இலக்கை 15வது ஓவரிலேயே எட்டி நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. இந்திய அணி அடைந்த மோசமான படுதோல்வி இது. 

அதிகமான பந்துகள் மீதமிருக்க, இந்திய அணி அடைந்த படுதோல்வி இதுதான். நியூசிலாந்து அணி இலக்கை எட்டி வெற்றி பெற்ற பிறகு 212 பந்துகள் மீதமிருந்தது. அதிகமான பந்துகள் எஞ்சியிருக்க, இந்திய அணி அடைந்த தோல்விகளில் இதுதான் மிகப்பெரிய தோல்வி. 

அதிகமான பந்துகள் எஞ்சியிருக்க, இந்திய அணி அடைந்த தோல்விகள்:

212 பந்துகள் மீதம் vs நியூசிலாந்து - 2019

209 பந்துகள் மீதம் vs இலங்கை - 2010

181 பந்துகள் மீதம் vs இலங்கை - 2012

176 பந்துகள் மீதம் vs இலங்கை -  2017

174 பந்துகள் மீதம் vs ஆஸ்திரேலியா - 1981