Indias Joshna defeated top ranked player
ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் தரவரிசையில் இருக்கும் போட்டியாளரை வீழ்த்தி இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா இறுதிச் சுற்றிற்கு முன்னேறி அசத்தினார்.
ஹாங்காங் சர்வதேச ஸ்குவாஷ் போட்டி நேற்று ஹாங்காங்கில் நடைப்பெற்றது.
இதன் அரையிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பாவும், போட்டித் தரவரிசையின் முதலாவது இடத்தில் இருக்கும் ஹாங்காங்கின் ஆன்னி ஆவும் எதிர்கொண்டனர்.
இருவருக்கும் இடையே விறுவிறுப்பாக நடைபெற்ற ஆட்டத்தின் முடிவில் 11-9, 10-12, 11-7, 8-11, 11-9 என்ற செட் கணக்கில் ஆன்னி ஆவை வீழ்த்தி ஜோஷ்னா சின்னப்பார் வெற்றிப் பெற்றார்.
கடந்தாண்டும் தனது அரையிறுதியில் ஆன்னி ஆவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினார் ஜோஷ்னா சின்னப்பார் என்பது கொசுறு தகவல்.
