ஓவலில் கேவலமான ரெக்கார்டு.. கோலியை பதறவைக்கும் பாஸ்ட்
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுவிட்டது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஓவலில் இதற்கு முன் இந்திய அணி ஆடிய விதம் மற்றும் போட்டி முடிவுகள் குறித்து பார்ப்போம்..
இந்தியா இங்கிலாந்து இடையேயான டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுவிட்டது. ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. ஓவலில் இதற்கு முன் இந்திய அணி ஆடிய விதம் மற்றும் போட்டி முடிவுகள் குறித்து பார்ப்போம்..
இந்தியா இங்கிலாந்து இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3-1 என இங்கிலாந்து அணி வென்றுவிட்டது. இதையடுத்து ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது.
லார்ட்ஸில் நடந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியை தவிர மற்ற இரண்டு போட்டிகளிலும் போராடியே இந்திய அணி தோல்வியடைந்தது. அந்த இரண்டு வெற்றிகளையும் இங்கிலாந்து அணிக்கு எளிதாக கொடுத்துவிடவில்லை. இந்நிலையில், டெஸ்ட் தொடரை இங்கிலாந்திடம் இழந்துவிட்ட போதிலும் கடைசி போட்டியில் வெற்றி பெறும் முனைப்பில் தான் இந்திய அணி உள்ளது.
கடைசி டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. அந்த மைதானத்தில் இந்திய அணி இதற்கு முன் எத்தகைய முடிவுகளை பெற்றிருக்கிறது என்று பார்ப்போம்..
கடந்த 2007ம் ஆண்டு டிராவிட் தலைமையிலான இந்திய அணி, இங்கிலாந்தில் தொடரை வென்றது. அதன்பிறகு இந்திய அணி, இதுவரை டெஸ்ட் தொடரை வெல்லவில்லை. அந்த தொடரின் மூன்றாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி ஓவலில் நடந்தது. அந்த போட்டி டிராவில் முடிந்தது.
டிராவிட் தலைமையிலான அணி மட்டும்தான் ஓவலில் போட்டியை டிரா செய்தது. அதன்பிறகு 2011 மற்றும் 2014ம் ஆண்டுகளில் தோனி தலைமையிலான இந்திய அணி, ஓவலில் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியுள்ளது.
2011ம் ஆண்டு ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியின் இயன் பெல் 235 ரன்களும் கெவின் பீட்டர்சன் 175 ரன்களும் குவித்தனர். இவர்களின் சிறப்பான ஆட்டத்தால் அந்த அணி முதல் இன்னிங்ஸில் 591 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து பேட்டிங் செய்த இந்திய அணியில் ராகுல் டிராவிட் மட்டுமே சிறப்பாக ஆடி 146 ரன்களை குவித்தார். மற்ற வீரர்களை மளமளவென விக்கெட்டுகளை இழந்ததால், முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 300 ரன்களும் இரண்டாவது இன்னிங்ஸில் 283 ரன்களும் எடுத்தது. இதையடுத்து இந்த போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 8 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
அதேபோல தோனி தலைமையிலான இந்திய அணி 2014ம் ஆண்டு இங்கிலாந்து சென்றபோது ஓவலில் நடந்த டெஸ்ட் போட்டியிலும் படுதோல்வி அடைந்தது. 2014ல் ஓவலில் நடந்த போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 244 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.
இவ்வாறு 2007ம் ஆண்டுக்கு பிறகு 2011 மற்றும் 2014 ஆகிய இரண்டு முறையும் ஓவல் மைதானத்தில் இந்திய அணி இன்னிங்ஸ் தோல்வி அடைந்துள்ளது.
ஓவலில் மோசமான ரெக்கார்டுகளை பெற்றிருக்கும் இந்திய அணி, இந்த முறை அதை மாற்றுமா..? அல்லது அதேபோல படுதோல்வியை சந்திக்குமா? பார்ப்போம்.