Indian veteran who broke the record 10 years ...

ஒருநாள் போட்டியில் 180 விக்கெட்டுகள் வீழ்த்தி கடந்த 10 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கேத்தரின் ஃபிட்ஸ்பேட்ரிக் தக்க வைத்திருந்த சாதனையை முறியடித்தார் இந்திய கிரிக்கெட் வீராங்கனை ஜுலன் கோஸ்வாமி. இவர் 181 விக்கெட்கள் வீழ்த்தி புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

தென் ஆப்பிரிக்காவில், இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையேயான ஒருநாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது.

இதில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றது.

இந்தப் போட்டியின்போது தனது 181-ஆவது விக்கெட்டாக தென் ஆப்பிரிக்க வீராங்கனை ராய்ஸிபேவை வீழ்த்தி ஜுலன் சாதனை படைத்தார். அவர் தனது 153-ஆவது போட்டியில் இந்தச் சாதனை விக்கெட்டை வீழ்த்தியுள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் நாடியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஜுலன். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டுதான் அணியில் சேர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.