அதிகமான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையை இந்திய நடுவர் சுந்தரம் ரவி பெற்றுள்ளார்.

சென்னையை சேர்ந்த நடுவர் சுந்தரம் ரவி. சர்வதேச டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியவர். 2015 உலக கோப்பையில் பணியாற்றிய 20 நடுவர்களில் சுந்தரம் ரவியும் ஒருவர்.

நல்ல அனுபவம் வாய்ந்த நடுவரான இவர், ஐபிஎல் போட்டிகளுக்கும் நடுவராக பணியாற்றி வருகிறார். ஐபிஎல் 11வது சீசனில் சென்னை மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நேற்று நடந்த இறுதி போட்டியில் நடுவர்களாக பணியாற்றிய இருவரில் இவரும் ஒருவர்.

நேற்றைய போட்டி ஐபிஎல்லில் இவர் நடுவராக பணியாற்றிய 97வது போட்டி. இதன்மூலம் அதிகமான ஐபிஎல் போட்டிகளுக்கு நடுவராக பணியாற்றியவர் என்ற பெருமையை ரவி பெற்றுள்ளார்.