ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் முதலாவது அரையிறுதியில் மும்பையை எதிர்கொண்டுள்ள தமிழக அணி, தனது முதல் இன்னிங்ஸில் 115.2 ஓவர்களில் 305 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

டாஸ் வென்று முதலில் பேட் செய்த தமிழகம், முதல் நாள் ஆட்டநேர முடிவில் 90 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 261 ஓட்டங்கள் எடுத்திருந்தது.

விஜய் சங்கர் 41, அஸ்வின் கிறிஸ்து 9 ஓட்டங்களுடன் 2-ஆவது நாள் ஆட்டத்தை தொடர்ந்தனர்.

இதில் விஜய் சங்கர் அரைசதம் கண்டு ஆட்டமிழந்தார். அஸ்வின் கிறிஸ்து 31 ஓட்டங்களில் பெவிலியன் திரும்பினார்.

எஞ்சிய வீரர்கள் சொற்ப ஓட்டங்ககளில் ஆட்டமிழக்க 305 ஓட்டங்கள் எடுத்தது தமிழக அணி.

மும்பை தரப்பில் ஷர்துல் தாக்குர், அபிஷேக் நாயர் தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

மும்பை-171/4: இதையடுத்து, தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியுள்ள மும்பை, 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 60 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 171 ஓட்டங்கள் எடுத்துள்ளது.

ஆதித்யா தாரே 19, ஸ்ரேயாஸ் ஐயர் 24 ஓட்டங்களுடன் களத்தில் உள்ளனர்.

தமிழக அணியின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்ட மும்பை இன்னும் 134 ஓட்டங்கள் எடுக்க வேண்டிய நிலையில், அணியின் வசம் 6 விக்கெட்டுகள் உள்ளன.