Indian team will qualify for knockout rounds - Head coach believes ...

2019 ஆசியக் கோப்பை கால்பந்து போட்டியில் இந்திய அணி நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கான்ஸ்டான்டைன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் தலைமை பயிற்சியாளர் கான்ஸ்டான்டைன் நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில், "ஐக்கிய அரபு நாடுகள் மறறும் பஹ்ரைனில் ஆசியக் கோப்பை கால்பந்து போட்டிகள் வரும் 2019 ஜனவரி 5 முதல் பிப்ரவரி 1-ஆம் தேதி வரை நடக்கிறது. இதில் 24 நாடுகள் பங்கேற்கின்றன.

தாய்லாந்து, ஐக்கிய அரபு நாடுகள், பஹ்ரைன், இந்தியா உள்ளிட்டவை குரூப் ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன. இதற்காக தயாராகும் வகையில் இந்திய அணி தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது.

கடந்த 2011-ஆம் ஆண்டு ஆசியக் கோப்பை போட்டியில் ஆஸ்திரேலியா, தென்கொரியா, பஹ்ரைனிடம் இந்தியா தோல்வியுள்ளது. ஆனால், இந்த முறை சூழல் மாறியுள்ளது. 

ஆறு பிரிவுகளில் முதலிரண்டு இடங்களைப் பெறும் அணிகள் நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெறும். ஜனவரி 6-இல் தாய்லாந்து, 10-இல் ஐக்கிய அரபு நாடுகள், 14-இல் பஹ்ரைனுடன் இந்தியா மோதுகிறது. 

நமது அணி நாக் ஔட் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பு அதிகமாக உள்ளது. இதற்காக மனரீதியிலும், உடல் ரீதியிலும் வீரர்கள் தயாராக வேண்டும்" என்று அவர் தெரிவித்தார்.