காமன்வெல்த் பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது அபாரமாக ஆட்டத்தால் 4-1 என்ற கோல் கணக்கில் மலேசிய வீழ்த்தி அசத்தியது.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

இதன், பெண்கள் ஹாக்கிப் போட்டியில் இந்திய அணி தனது தொடக்க ஆட்டத்தில் வலு குறைந்த வேல்ஸ் அணியிடம் 2-3 என்ற கணக்கில் அதிர்ச்சித் தோல்வி அடைந்தது. 

இதனிடையே நேற்று தனது இரண்டாவது ஆட்டத்தில் மலேசிய அணியை இந்திய வீராங்கனைகளை எதிர் கொண்டனர். 

வீராங்கனை குர்ஜித் கெளர் பெனால்டி கார்னர் வாய்ப்பு மூலம் 2 கோல்களையும், கேப்டன் ராணி ராம்பால், லால்ரேம்சியாமி ஆகியோர் தலா 1 கோல் என்று மொத்தம் நான்கு கோல்களை அடித்தனர். 

மலேசிய அணி தரப்பில் நுரையினி ரஷித் ஓரே ஒரு கோலை அடித்தார்.

காமன்வெல்த் பெண்கள் ஹாக்கிப் போட்டியில் முதல் ஆட்டத்தில் இந்திய தோற்றாலும் இரண்டாவது ஆட்டத்தில் அபாரமாக ஆடி வெற்றி பெற்று அசத்தியது.