Indian table tennis player to play with the best German club ...

தலைசிறந்த ஜெர்மன் கிளப்புடன் இந்திய டேபிள் டென்னிஸ் வீரர் ஜி.சத்யன் விளையாடுவதற்காக ஒப்பந்தமிட்டு உள்ளார். 

தமிழகத்தைச் சேர்ந்த சத்யன் கடந்த மாதம் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் தங்கம் உள்பட மூன்று பதக்கங்களை வென்று அசத்தியவர். 

சமீபத்தில் நடந்த உலக சாம்பியன் போட்டிகளில் 13-வது இடம் பெற்ற இந்திய அணியிலும் சத்யன் இடம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அவர் ஜெர்மனியின் தலைசிறந்த கிளப்புகளில் ஒன்றான ஏ.எஸ்.வி ரன்வெட்டர்ஸ்பேட்ச் கிளப்பில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 

ஜாகர்தாவில் நடைபெறவுள்ள ஆசிய விளையாட்டுப் போட்டிக்கு பின் அவர் செப்டம்பரில் இருந்து ஜெர்மனி கிளப் சார்பில் விளையாடுவார். 

இதுகுறித்து சத்யன், "ஏற்கெனவே இந்தியாவின் சரத் கமல் ஜெர்மன் லீக் போட்டியில் விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார். அவருக்கு பின் என்னை செய்துள்ளது மகிழ்ச்சி தருகிறது. 

டிமோ பால், கவுஸி, ஹுகோ போன்ற சிறந்த வீரர்களுடன் விளையாட உள்ளேன். ஏற்கெனவே போலந்து, ஸ்வீடனில் லீக் போட்டிகளில் விளையாடியுள்ளேன்" என்று அவர் தெரிவித்தார்.