Asianet News TamilAsianet News Tamil

இந்தியன் சூப்பர் லீக்: கொல்கத்தா - கோவா மோதும் விறுவிறுப்பான ஆட்டம் இன்று...

Indian Super League Calcutta - Goa game today ...
Indian Super League Calcutta - Goa game today ...
Author
First Published Jan 3, 2018, 11:07 AM IST


இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா  - எப்சி கோவா அணிகள் மோதும் விறுவிறுப்பான 37-வது லீக் ஆட்டம் இன்று நடைபெறவுள்ளது.

இந்தியன் சூப்பர் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் அட்லெடிகோ டி கொல்கத்தா  - எப்சி கோவா அணிகள் மோதும் விறுவிறுப்பான 37-வது லீக் ஆட்டம் மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள சால்ட் லேக் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

நடப்பு சாம்யினான கொல்கத்தா, இதுவரை 6 லீக் ஆட்டங்களில் விளையாடி அதில் 2 வெற்றி, 2 டிரா, 2 தோல்வியைப் பதிவு செய்து, 8 புள்ளிகளுடன் பட்டியலில் 7-ஆவது இடத்தில் உள்ளது.

கோவா அணி 6 ஆட்டங்களில் விளையாடி, அதில் 4 வெற்றி, 2 தோல்விகளைப் பதிவு செய்து, 12 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தில் உள்ளது.

கொல்கத்தா அணி, சொந்த மண்ணில் மும்பை சிட்டி, தில்லி டைனமோஸ் ஆகிய அணிகளை வீழ்த்தி 2 வெற்றிகளைப் பதிவு செய்துள்ளது.

சொந்த மண்ணில் இன்று நடைபெறும் ஆட்டத்திலும் கொல்கத்தா வெற்றியைப் பதிவு செய்யும் என்று உள்ளூர் ரசிகர்கள் பெரிதும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

எஃப்சி கோவா அணி, கடந்த நவம்பர் மாதம் 19-ஆம் தேதி நடைபெற்ற தனது முதல் ஆட்டத்தில் சென்னையின் எஃப்சி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.

அதனைத் தொடர்ந்து மும்பை சிட்டி எஃப்சி அணியிடம் தோல்வியைத் தழுவிய கோவா, சொந்த மண்ணில் நடைபெற்ற பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2-ஆவது வெற்றியைப் பதிவு செய்தது.

அதனையடுத்து, கடந்த மாதம் நடைபெற்ற கேரள பிளாஸ்டர்ஸ் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்திலும், தில்லி டைனமோஸ் எஃப்சி அணிக்கு எதிரான ஆட்டத்திலும் கோவா வெற்றி பெற்றது.

டிசம்பர் 23-ஆம் தேதி சொந்த மண்ணில் நடைபெற்ற 31-வது லீக் ஆட்டத்தில் புணே சிட்டி எஃப்சி அணியிடம் கோல் எதுவும் பதிவு செய்யாமல் தோல்வியைச் சந்தித்து கோவா.

இந்த நிலையில், கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Follow Us:
Download App:
  • android
  • ios