இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தின் (ஐஎஸ்எல்) அரையிறுதியின் 2-வது பகுதி ஆட்டத்தில் எஃப்சி புணே சிட்டி அணியை பெங்களூரு அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்தியன் சூப்பர் லீக் கால்பந்தாட்டத்தில் (ஐஎஸ்எல்) பெங்களூரு எஃப்சி - எஃப்சி புணே சிட்டி அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் 2-வது பகுதி ஆட்டத்தில் பெங்களூரு 3-1 என்ற கோல் கணக்கில் வென்றது.

இந்த இரு அணிகளுக்கு இடையேயான அரையிறுதியின் முதல் பகுதி ஆட்டம் கோல் இன்றி டிரா ஆகியிருந்த நிலையில், 2-வது பகுதி ஆட்டத்தில் வென்றதன் அடிப்படையில் பெங்களூரு முதல் அணியாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது.

பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூரு கேப்டன் சுனில் சேத்ரி ஹாட்ரிக் கோல் அடிக்க, புணே தரப்பில் ஜோனதன் லுக்கா ஒரு கோல் அடித்தார். 

மற்றொரு அரையிறுதியில் மோதும் சென்னையின் எஃப்சி - எஃப்சி கோவா அணிகளுக்கு இடையேயான 2-வது பகுதி ஆட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.  இதில் வெல்லும் அணி, இறுதி ஆட்டத்தில் பெங்களூரை எதிர்கொள்ளும்.