indian squad for afghanistan test
ஆஃப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணிக்கு ரஹானே கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இந்த டெஸ்ட் அணியில் ரோஹித் சர்மா பெயர் இடம்பெறவில்லை.
முழுநேர டெஸ்ட் அந்தஸ்து பெற்றுள்ள ஆஃப்கானிஸ்தான் அணி, வரும் ஜூன் மாதம் 14ம் தேதி, முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியுடன் மோதுகிறது.
அதற்கு அடுத்ததாக இந்திய அணி இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது. இங்கிலாந்து தொடரில் சிறப்பாக ஆடுவதற்காக, அங்கு நடக்கும் கவுண்டி போட்டிகளில் ஆட உள்ளார் இந்திய அணி கேப்டன் கோலி. கவுண்டி போட்டிகளில் ஆடுவதால், ஆஃப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியிலிருந்து கோலி விலகியுள்ளார்.
இந்நிலையில், ஆஃப்கானிஸ்தானுடனான டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. அதன் பிறகு வீரர்களின் பட்டியல் வெளியிடப்பட்டது.
கோலி இல்லாததால், ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டியின் கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் சர்மாவிற்கு இந்த டெஸ்ட் அணியில் கிடைக்கவில்லை. கருண் நாயர் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஃப்கானிஸ்தான் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி வீரர்கள்:
அஜிங்கியா ரஹானே(கேப்டன்), ஷிகர் தவான், முரளி விஜய், கே.எல்.ராகுல், புஜாரா, கருண் நாயர், ரிதிமான் சஹா(விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், உமேஷ் யாதவ், ஹர்திக் பாண்டியா, முகமது ஷமி, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர்
