ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு கேப்டனாக இந்தியாவின் சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் நியமிக்கப்பட்டு உள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸில் எட்டு ஆண்டுகளாக அங்கம் வகித்த அஸ்வின், ரைசிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸ் அணியிலும் விளையாடியிருந்தார்.

இந்த நிலையில், இந்த சீசனில் பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டுள்ள அவர், தற்போது அந்த அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டு உள்ளார்.

இதுகுறித்து அஸ்வின், "திறமை வாய்ந்த பல வீரர்கள் இருக்கும்போது என்னை நம்பி கேப்டன் பொறுப்பை ஒப்படைத்துள்ளதை எனக்கான கெளரவமாக கருதுகிறேன்.

அணியை சிறப்பாக வழிநடத்த இயலும் என்ற நம்பிக்கை உள்ளது. கேப்டனாக இருப்பதால் கூடுதல் நெருக்கடி ஏதும் இல்லை.

முதல் தர கிரிக்கெட்டில் எனது 21 வயதில் தமிழக அணிக்காக கேப்டனாக இருந்துள்ளேன். ஏற்கெனவே கேப்டன்ஷிப் அனுபவம் உள்ளதால், அதனை அனுபவித்து போட்டியில் விளையாடுவேன்" என்று அவர் தெரிவித்தார்.