இங்கிலாந்துக்கு எதிரான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் ஆடிவருகிறது.

5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை இங்கிலாந்து அணி ஏற்கனவே 3-1 என வென்றுவிட்டது. இந்நிலையில், கடைசி போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடந்துவருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி, முதலில் பேட்டிங் ஆடிவருகிறது. 

முதல் நான்கு போட்டிகளிலும் டாஸ் தோற்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி, இந்த முறையும் டாஸ் தோற்றார். இங்கிலாந்து கேப்டன் ஜோ ரூட் டாஸ் போட்டார். விராட் கோலி, ஹெட்(தலை) கேட்டார். ஆனால் டெய்ல் விழுந்ததால் இங்கிலாந்து அணி டாஸ் வென்றது. 

முதல் நான்கு போட்டிகளில் டாஸ் தோற்ற கோலி, கடைசி போட்டியிலும் டாஸ் தோற்றார். டாஸ் போட்டபிறகு பேசிய கோலி, காயினின் இரண்டு பக்கமும் தலை இருந்தால்தான் நான் டாஸ் ஜெயிக்கமுடியும் போல? என காமெடி செய்தார். ஏனைய 4 போட்டிகளிலுமே தலை கேட்டுத்தான் டாஸ் தோற்றார் கோலி. இந்த போட்டியிலும் அதே நடந்தது.