Indian selection as vice president of Asian Badminton Alliance ... Who is he?

இந்தியாவின் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா ஆசிய பாட்மிண்டன் கூட்டமைப்பு துணைத் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

பாங்காக்கில் (பிஏசி) ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் துணைத் தலைவராக இந்திய பாட்மிண்டன் சம்மேளனத் தலைவர் ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா தேர்ந்தெடுக்கப்பட்டார். 

இதுதொடர்பாக சர்மா, "என் மீது நம்பிக்கை வைத்து தேர்வு செய்த கூட்டமைப்பு உறுப்பினர்கள், பிற நாடுகளின் நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். 

ஆசிய நாடுகள் மத்தியில் சிறப்பான ஒருங்கிணைப்பை ஏற்படுத்த பாடுபடுவேன். 

இத்தேர்வு மூலம் பாட்மிண்டன் விளையாட்டில் இந்தியாவின் வளர்ந்து வரும் சூழலை நிரூபிக்கிறது. 

இதன் மூலம் இந்தியாவில் பாட்மிண்டன் மேலும் பொலிவு பெறும்" என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.