வியத்நாம் ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டியில் இந்தியாவின் ருத்விகா ஷிவானி, லக்ஷயா சென், அர்ஜூன் - ராமசந்திரன் இணை காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறினர்.

வியத்நாம் ஓபன் கிராண்ட் ஃப்ரீ பாட்மிண்டன் போட்டி வியத்நாமில் நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் நேற்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் சீன தைபேவின் வான் இ டாங்கை எதிர்கொண்டார் இந்தியாவின் ருத்விகா ஷிவானி.

இந்த ஆட்டத்தில் ருத்விகா, 21-15, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வான் இ டாங்கை வீழ்த்தினார் ருத்விகா.

ருத்விகா காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருக்கும் இந்தோனேசியாவின் தினார் தியா அயுஸ்டினை எதிர்கொள்கிறார்.

ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், வியத்நாமின் ட்ரோங் தான் லாங்குடன் மோதினார்.

இதில், 21-14, 21-12 என்ற நேர் செட் கணக்கில் ட்ரோங் தான் லாங்கை வீழ்த்தினார் லக்ஷயா சென்.

லக்ஷயா சென் தனது காலிறுதியில் ஜப்பானின் கோடாய் நராவ்காவை சந்திக்கிறார்

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் அர்ஜூன் - ராமசந்திரன் இணை, மலேசியாவின் லோ ஹாங் யீ - மஸ்தான் ஜின் வா இணையுடன் மோதியது.

இதில், 14-21, 21-12, 21-12 என்ற செட் கணக்கில் லோ ஹாங் யீ - மஸ்தான் ஜின் வா இணைஐ வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது அர்ஜூன் - ராமசந்திரன் இணை.