ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் பேட்டிங் மற்றும் பவுலிங்கில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் மூன்று இந்திய வீரர்களும் பவுலிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் இரண்டு இந்திய வீரர்களும் இடம்பெற்றுள்ளனர். 

ஐசிசி ஒருநாள் தரவரிசை பட்டியலில் பேட்டிங் தரவரிசையில் முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்கள் உள்ளனர். ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் 884 புள்ளிகளுடன் விராட் கோலி முதலிடத்தில் நீடிக்கிறார். 842 புள்ளிகளுடன் ரோஹித் சர்மா இரண்டாமிடத்திலும் 802 புள்ளிகளுடன் ஷிகர் தவான் ஐந்தாமிடத்திலும் உள்ளனர். இதில் மூன்று மற்றும் நான்காவது இடங்களில் முறையே இங்கிலாந்தின் ஜோ ரூட் மற்றும் ஆஸ்திரேலியாவின் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் உள்ளனர். 

பவுலிங்கை பொறுத்தமட்டில் 797 புள்ளிகளுடன் பும்ரா முதலிடத்திலும் 700 புள்ளிகளுடன் குல்தீப் யாதவ் மூன்றாமிடத்திலும் உள்ளனர். 788 புள்ளிகளுடன் ஆஃப்கானிஸ்தான் சுழல் மன்னன் ரஷீத் கான் இரண்டாமிடத்தில் உள்ளார்.

பேட்டிங்கில் முதல் 5 இடங்களில் 3 இந்திய வீரர்களும் பவுலிங்கில் முதல் 5 இடங்களில் 2 இந்திய வீரர்களும் உள்ளனர். ஒருநாள் தரவரிசை பட்டியலில் இந்திய வீரர்கள் ஆதிக்கம் செலுத்துகின்றனர். ஆனால் ஒருநாள் தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரு இந்திய வீரர் கூட இடம்பெறவில்லை. 

டெஸ்ட் தரவரிசையில் பேட்டிங்கை பொறுத்தமட்டில் இதிலும் கோலிதான் முதலிடத்தில் உள்ளார். 935 புள்ளிகளுடன் கோலி முதலிடத்திலும் 919 புள்ளிகளுடன் ஸ்டீவ் ஸ்மித் இரண்டாமிடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரர் புஜாரா 765 புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளார். 

டெஸ்ட் கிரிக்கெட்டுக்கான பவுலிங் தரவரிசையில் 812 புள்ளிகளுடன் ஜடேஜா நான்காமிடத்திலும் 777 புள்ளிகளுடன் அஷ்வின் 8வது இடத்திலும் உள்ளனர். ஒருநாள் போட்டிக்கான ஆல்ரவுண்டர் தரவரிசையில் முதல் 10 இடங்களில் ஒரு வீரர் கூட இல்லாத குறையை டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் ஜடேஜாவும் அஷ்வினும் போக்கியுள்ளனர். டெஸ்ட் ஆல்ரவுண்டர் தரவரிசையில் 400 புள்ளிகளுடன் ஜடேஜா இரண்டாவது இடத்திலும் 341 புள்ளிகளுடன் அஷ்வின் 5வது இடத்திலும் உள்ளனர். 

வெஸ்ட் இண்டீஸ் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் டெஸ்ட் தரவரிசையில் இந்திய வீரர்கள் சிலர் முன்னேறியுள்ளனர். பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பிரித்வி 73வது இடத்தில் இருந்து 60வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரிஷப் பண்ட் 62வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். ரஹானே 18வது இடத்திலும், பவுலர்களில் உமேஷ் யாதவ் 25வது இடத்திலும் உள்ளனர்.