Indian Open Badminton Start Today - Saina Nevala sIndu Srikanth Participation ...
இன்றுத் தொடங்கும் இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நெவால், சிந்து, ஹெச்.எஸ்.பிரணாய், ஸ்ரீகாந்த், காஷ்யப், அஜய் ஜெயராம், ராங்கிரெட்டி - சிரக் ஷெட்டி, சுமீத் ரெட்டி - மானு அத்ரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
டெல்லியில் இன்றுத் தொடங்கும் இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியில் சாய்னா நெவால், சிந்து, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர்.
போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருக்கும் சாய்னா, தனது தொடக்க சுற்றில் டென்மார்க்கின் சோஃபி தாஹலை எதிர்கொள்கிறார். அவர் முன்னேறும் பட்சத்தில் காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-வது இடத்தில் இருக்கும் சீனாவின் பெய்வென் ஸாங்கை எதிர்கொள்வார்.
சிந்து முதல் ஆட்டத்தில் டென்மார்க்கின் நடாலியா ரோடேவை சந்திக்கிறார். அவர் தனது அரையிறுதியில் தாய்லாந்தின் ரட்சனோக் இன்டனோனை எதிர்கொள்ளலாம்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் போட்டித் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கும் ஸ்ரீகாந்த் தனது தொடக்க ஆட்டத்தில், ஹாங்காங்கின் காங்ஸ் லீ செக் யியுவை எதிர்கொள்கிறார்.
அவர் அடுத்தடுத்து முன்னேறும் பட்சத்தில் இறுதிச்சுற்றில் உலகின் முதல் நிலை வீரரும், நடப்பு சாம்பியனுமான டென்மார்க்கின் விக்டர் அகாஸல்சனை சந்திக்க வாய்ப்புள்ளது.
உலகின் 10-ஆம் நிலை வீரரான ஹெச்.எஸ்.பிரணாய் முதல் ஆட்டத்தில் தகுதிச்சுற்று வீரரை எதிர்கொள்கிறார்.
சாய் பிரணீத் - இங்கிலாந்தின் ராஜீவ் ஒசெப்புடனும், காஷ்யப் - டென்மார்க்கின் ஹான்ஸ் கிறிஸ்டியன் விட்டிங்கஸூடனும், அஜய் ஜெயராம் - இந்தோனேஷியாவின் டாமி சுகியார்டோவுடனும் மோதுகின்றனர்.
ஆடவர் இரட்டையர் பிரிவில் ராங்கிரெட்டி - சிரக் ஷெட்டி இணை, ஹாங்காங்கின் சாங் டாக் சிங் - ஹீ சுன் மாக் இணையை எதிர்கொள்கிறது.
சுமீத் ரெட்டி - மானு அத்ரி இணை மலேசியாவின் ஆங் யீவ் சிங் - டியோ இ யி இணையை சந்திக்கிறது.
