Indian Open Badminton sindhu lost in finals
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் இறுதிச்சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து அதிர்ச்சித் தோல்வி கண்டார்.
இந்திய ஓபன் பாட்மிண்டன் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிச்சுற்றில் நடப்புச் சாம்பியனான இந்தியாவின் சிந்து மற்றும் அமெரிக்காவின் பெய்வென் ஸாங்க் மோதினர்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் சிந்து, 18-21, 21-11, 20-22 என்ற செட்களில் பெய்வென் ஸாங்கிடம் தோல்வி கண்டார்.
இத்துடன் பெய்வென்னை 4 முறை சந்தித்துள்ள சிந்து, 2 வெற்றி, 2 தோல்விகளை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் சீனாவின் ஷி யுகி 21-18, 21-14 என்ற நேர் செட்களில்" தைவானின் சோவ் டியென் சென்னை வென்று சாம்பியன் ஆனார்.
கலப்பு இரட்டையர் பிரிவில் டென்மார்க்கின் மதியாஸ் கிறிஸ்டியான்சென் - கிறிஸ்டினா பெடர்சன் இணை, இந்தோனேஷியாவின் பிரவீண் ஜோர்டான் - மெலாடி டேவா ஆக்டாவியான்டி இணையை வென்று சாம்பியன் ஆனது.
