Indian hockey team wins for nine years
அரசு வேலைக்காக கடந்த ஒன்பது ஆண்டுகளாக இந்திய ஹாக்கி அணியின் சிறந்த கோல்கீப்பர் விருதைப் பெற்ற சவிதா பூனியா காத்திருக்கிறார்.
ஆசிய கோப்பை மகளிர் அணியில் அரியாணாவைச் சேர்ந்த சவிதா இடம்பெற்றிருந்தார். ஜப்பானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இதன் இறுதி ஆட்டத்தில் 'ஷூட் அவுட்' முறையில் 5-4 என்ற கோல் கணக்கில் சீனாவைத் தோற்கடித்து இந்திய அணி கோப்பையை வென்றது. அந்தப் போட்டியில் சிறந்த கோல்கீப்பர் என்ற விருதை சவிதா பெற்றார்.
இந்த நிலையில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த சவிதா கூறியது: கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் சர்வதேச போட்டிகளில் இந்திய அணியின் சார்பில் தனக்கு, இன்னும் மத்திய அரசிலோ, மாநில அரசிலோ வேலை கிடைக்கவில்லை என்று ஆதங்கம் தெரிவித்துள்ளார்.
“ஆசிய கோப்பையைக் கைப்பற்ற நானும் பங்களித்திருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அணியின் வெற்றிக்காகக் கடுமையாக உழைக்கிறேன். எனக்கு அரசுப் பணி கிடைக்கவில்லை என்ற ஆதங்கம், ஆட்டத்தில் பாதிப்பை ஏற்படுத்தாமல் பார்த்துக் கொள்கிறேன். கடந்த 9-ஆண்டுகளாக அரசு பணிக்காக முயற்சித்து வருகிறேன்.
அரியாணாவில், பதக்கம் வெல்லும் வீரர், வீராங்கனைகளுக்கு அரசுப் பணி வழங்கும் திட்டத்தின் கீழ் எனக்கு பணி வழங்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்து வருகின்றனர். ஆனால், இதுவரை எந்தப் பணியும் கிடைக்கவில்லை.
தற்போது எனக்கு 27 வயதாகிறது. இன்றுவரை எனது தந்தையின் வருமானத்தைதான் சார்ந்திருக்கிறேன். ஒவ்வொரு வெற்றிக்குப் பிறகும் எனக்கு அரசு வேலை கிடைக்கும் என்று காத்திருக்கிறேன்.
எனினும், ஆசிய கோப்பை வெற்றியானது எனக்கு பணியை பெற்றுத் தரும் என நிச்சயமாக நம்புகிறேன் என்றார் சவிதா.
