Indian boxers to match impossibly acattiya India is committed to the medal

தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டைப் போட்டியில் இந்தியாவின் ஷியாம் குமார் மற்றும் ரோஹித் டோகாஸ் ஆகியோர் அசாத்திய ஆட்டத்தால் அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர்.

தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் தாய்லாந்து சர்வதேச குத்துச்சண்டைப் போட்டி நடைபெற்று வருகிறது.

இந்தப் போட்டியில் 49 கிலோ எடைப் பிரிவில் ஷியாம் தனது காலிறுதியில் தாய்லாந்தின் சமாக் சேஹனை வெற்றிக் கண்டு அரையிறுதிக்கு முன்னேறினார்.

ஷியாம் தனது அரையிறுதியில் முன்னணி வீரரான கியூபாவின் ஜார்ஜ் அலிஜான்ட்ரோவை எதிர் கொள்கிறார்.

64 கிலோ எடைப் பிரிவில் ரோஹித் தனது காலிறுதியில் கஜகஸ்தானின் குயாடோவ் குயானை தோற்கடித்து அரையிறுதிக்கு முன்னேறினார்.

இந்தியாவின் ரோஹித்தும், உஸ்பெகிஸ்தானின் இல்னூரும் மோதுகின்றனர்.

ஷியாமும், ரோஹித்தும் அரையிறுதிக்கு முன்னேறியதால் தங்களது பதக்கத்தை உறுதி செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.