மகளிர் ஒரு நாள் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசையில் இந்திய ஒரு நாள் போட்டி அணியின் கேப்டனான மிதாலி ராஜ் இரண்டாவது இடத்தையும், ஹர்மான்பிரீத் கெளர் பத்தாவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் தகுதிச் சுற்றில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது.

அந்தத் தொடரில் சிறப்பாக ஆடியதன் மூலம் மிதாலி, கெளர் ஆகியோர் தரவரிசையில் ஏற்றம் அடைந்துள்ளனர்.

ஆஸ்திரேலியாவின் மெக் லேனிங் 804 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக மிதாலி ராஜ் 744 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் இருக்கிறார்.

ஹர்மான்ப்ரீத் கெளர் 574 புள்ளிகளுடன் பத்தாவது இடத்தில் உள்ளார்.

மகளிர் பெளலிங் தரவரிசையில் இந்தியாவின் ஜுலான் கோஸ்வாமி மூன்றாவது இடத்தில் உள்ளார். அவர் காயம் காரணமாக உலகக் கோப்பை தகுதிச் சுற்றில் விளையாடாதபோதும், இறக்கத்தைச் சந்திக்கவில்லை.

தென் ஆப்பிரிக்காவின் மெரிஸானே காப் முதல் இடத்திலும், மேற்கிந்தியத் தீவுகளின் ஸ்டெபானி டெய்லர் ஆகியோர் இரண்டாவது இடத்திலும் உள்ளார்.

இந்தியாவைச் சேர்ந்த இடது கை சுழற்பந்து வீச்சாளரான இக்தா பிஸ்த் எட்டாவது இடத்தில் இருக்கிறார்.