இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 246 ரன்கள் வித்யிதியாசத்தில் அபார வெற்றி பெற்று, தாெடாில் முன்னிலை பெற்றுள்ளது. 

விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இந்திய அணி ‌455 ரன்களும், இங்கிலாந்து அணி 255 ரன்களும் எடுத்தன. பின்னா் இரண்டாவது இன்னிங்சை தாெடங்கிய இந்திய அணி, 204 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

405 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி, மிகவும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. 4வது நாளான நேற்று, ஆட்ட நேர முடிவில், அந்த அணி 2 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் ஆட்டத்தை இன்று தொடங்கியது. 

நான்காவது வீரராகக் களமிறங்கிய டக்கெட், ரன் கணக்கைத் தொடங்கும் முன்பே, விக்கெட்டை இழந்தார். பின்னர் வந்த மொயின் அலி, 2 ரன்களிலும், பென் ஸ்டோக்ஸ் 6 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.‌ நிதானமாக விளையாடிய ஜோ ரூட் 25 ரன்களில் பெவிலியன் திரும்பினார். முடிவில் இங்கிலாந்து அணி 158 ரன்களில் ஆட்டமிழந்தது. இதன் மூலம் 246 ரன்கள்‌ வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி‌, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒன்றுக்கு - பூஜ்யம் என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இரு அணிகள் இடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டி, மொகாலியில் வரும் 26ஆம் தேதி தொடங்குகிறது.