ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இந்திய ஆடவர் அணி இரண்டாவது முறையாக தங்கப் பதக்கம் வென்றது.

ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்றது.

இந்தப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் மலேசிய அணியைத் தோற்கடித்தது.

இந்தப் போட்டியின் முதல் ஆட்டத்தில் இந்தியாவின் செந்தில் வேலவன் 12-10, 11-0, 11-2 என்ற நேர் செட்களில் மலேசியாவின் ஆங் சாய் ஹன்னை தோற்கடித்தார்.\

இரண்டாவது ஆட்டத்தில் இந்தியாவின் அபய் சிங் 10-12, 7-11, 11-5, 14-12, 11-6 என்ற செட் கணக்கில் மலேசியாவின் டேரன் ராகுலைத் தோற்கடித்தார்.

இதன்மூலம் ஆசிய ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில் இரண்டாவது முறையாக தங்கப் பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளது இந்தியா.

முன்னதாக 2011-இல் இந்தியா, பாகிஸ்தானை வீழ்த்தி சாம்பியன் ஆனது குறிப்பிடத்தக்கது.