முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து அணிகளை எதிர்கொள்ளும் இந்திய மகளிர் அணி ஹர்மன்பிரீத் தலைமையில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் வரும் 22 முதல் 31-ஆம் தேதி வரையில் முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி தொடர் நடைபெறுகிறது. 

அதன்படி, 22-இல் இந்தியா - ஆஸ்திரேலியா, 23-இல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, 25-இல் இந்தியா - இங்கிலாந்து மோதுகின்றன.  26-ல் இந்தியா - ஆஸ்திரேலியா, 28-ல் ஆஸ்திரேலியா - இங்கிலாந்து, 29-ல் இந்தியா-இங்கிலாந்து மோதுகின்றன.  இறுதி ஆட்டம் 31-ஆம் தேதி நடைபெறும்.

காயம் காரணமாக ஓய்வில் இருந்த பந்துவீச்சாளர் ஜுலன் கோஸ்வாமி, இந்த அணியில் இடம்பிடித்துள்ளார். 

ஸ்மிருதி மந்தனா துணை கேப்டனாக இருக்கும் இந்த அணிக்கு தானியா பாட்டியா விக்கெட் கீப்பிங் செய்கிறார்.

அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணி: 

ஹர்மன்பிரீத் கெளர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, மிதாலி ராஜ், வேதா கிருஷ்ணமூர்த்தி, ஜெமிமா ரோட்ரிகஸ், அனுஜா பாட்டீல், தீப்தி சர்மா, டானியா பாட்டியா, பூனம் யாதவ், எக்தா பிஷ்த், ஜுலன் கோஸ்வாமி, ஷிக்ஷா பாண்டே, பூஜா வஸ்த்ரகர், ருமேலி தார், மோனா மேஷ்ராம்.