இந்தியாவில் அக்டோபர் மாதம் பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்தியாவுக்கு அக்டோபர் மாதம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மேற்கிந்தியத் தீவுகள் அணி விளையா உள்ளது. இதில் 2 டெஸ்ட் போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள், 3 டி20 போட்டிகள் அடங்கும். 

இது குறித்து பிசிசிஐ வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: இந்தியாவுக்கு 7 வாரங்கள் பயணம் மேற்கிந்தியத்தீவுகள் பயணம் மேற்கொள்கிறது. இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி அக்டோபர் 4-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை ராஜ்கோட்டில் நடக்கிறது. 2-வது டெஸ்ட் போட்டி 12-ம் தேதி முதல் 16-ம் தேதி வரை ஹைதராபாத்தில் நடக்கிறது. 

5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் அக்டோர் 21 முதல் நவம்பர் 1-ம் தேதி வரை நடக்கிறது. முதல் ஒருநாள் போட்டி அக்டோபர் 21-ம் தேதி கவுகாத்தியிலும், 2-வது போட்டி 24-ம்தேதி இந்தூரிலும், 3-வது ஒருநாள் போட்டி 27-ம் தேதி புனேயிலும் நடக்கின்றன.  4-வது ஒருநாள் போட்டி 29-ம் தேதி திருவனந்தபுரத்திலும், 5-வது மற்றும் கடைசி போட்டி நவம்பர் 1-ம் தேதி மும்பையிலும் நடக்கிறது.

அதன்பின் 3 போட்டிகள் கொண்ட டி20 போட்டித் தொடர் நடைபெறவுள்ளது. முதல் டி20 போட்டி நவம்பர் 4-ம் தேதி கொல்கத்தாவிலும், 2-வது ஆட்டம் நவம்பர் 6-ம் தேதி லக்னோவிலும், சென்னையில் நவம்பர் 11-ம் தேதி 3-வது டி20 போட்டி நடைபெறவுள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.