India win against South africa in champion trophy cricket

சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்தியா- தென் ஆப்ரிக்க அணிகள் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்ரிக்காவை வீழ்த்தி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் அரையிறுதிக்கு முன்னேறுவது யார் என்பதை நிர்ணயிக்கும் போட்டியில் இந்தியா - தென்ஆப்பிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் அஸ்வின் சேர்க்கப்பட்டிருந்தார்.

முதலில் களம் இறங்கிய தென்ஆப்பிரிக்க பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 44.3 ஓவரில் 191 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. புவனேஸ்வர் குமார், பும்ப்ரா தலா இரண்டு விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்கள்.



தவான் அவுட் ஆனதும் யுவராஜ் சிங் களம் இறங்கினார். இந்த ஜோடி இந்திய அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றது. 38-வது ஓவரின் கடைசி பந்தை யுவராஜ் சிங் சிக்சருக்கு தூக்க இந்தியா 38 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. விராட் கோலி 101 பந்தில் 7 பவுண்டரி, 1 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்தும், யுவராஜ் சிங் 25 பந்தில் 23 ரன்கள் எடுத்தும் களத்தில் இருந்தனர்.

இந்த வெற்றியின் மூலம் ‘பி’ பிரிவில் இருந்து இந்தியா அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது. இந்தியா 15-ந்தேதி பர்மிங்காமில் நடைபெறும் அரையிறுதியில் வங்க தேசத்தை எதிர்கொள்கிறது.