India will play in this section in Commonwealth Games ...

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் பாட்மிண்டன் விளையாட்டில் இந்தியா 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

2018-ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் வரும் ஏப்ரல் 4 முதல் 15-ஆம் தேதி வரையில் ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெறவுள்ளது.

இதில் பாட்மிண்டன் போட்டியில் பங்கேற்கும் 16 நாடுகள், பிரிவுக்கு 4 அணிகள் என 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.

இதில் 'ஏ' பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, ஸ்காட்லாந்து அணிகள் கலந்து கொள்கின்றன.

'பி' பிரிவில் சிங்கப்பூர், மொரீஷஸ், ஸாம்பியா, ஜமைக்கா அணிகள் கலந்து கொள்கின்றன.

'சி' பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, உகான்டா அணிகள் கலந்து கொள்கின்றன.

'டி' பிரிவில் மலேசியா, கனடா, செஷல்ஸ், கானா அணிகளும் கலந்து கொள்கின்றன.

இந்த அணிகள் ஆடவர், மகளிர் ஒற்றையர், ஆடவர், மகளிர் இரட்டையர், கலப்பு இரட்டையர் பிரிவுகளில் மோதும்.

அனைத்து பிரிவுகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு தகுதிபெறும்.

இதில் கலப்பு அணிகள் பிரிவு இறுதி ஆட்டங்கள் ஏப்ரல் 9-ஆம் தேதியும், ஒற்றையர் மற்றும் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டங்கள் ஏப்ரல்-14 மற்றும் 15-ஆம் தேதியும் நடைபெறும்.