India Velavan Senthilkumar won the first World Squash Champion
மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் உலகின் 255-ஆம் நிலை வீரரான இந்தியாவின் வேலவன் செந்தில்குமார் முதல் உலக ஸ்குவாஷ் டூர் பட்டத்தை வென்று அசத்தினார்.
மேடிசன் ஓபன் ஸ்குவாஷ் போட்டியில் அமெரிக்காவில் நடைபெற்றது. இந்தப் போட்டியில், வேலவன் செந்தில்குமார் தனது இறுதிச்சுற்றில் போட்டித் தரவரிசையில் 4-வது இடத்தில் இருந்த தென் ஆப்பிரிக்காவின் டிரிஸ்டான் ஐசெலெவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பான இந்த ஆட்டம் 56 நிமிடங்களில் முடிவுக்கு வந்தது. இதில், 7-11, 13-11, 12-10, 11-4 என்ற செட்களில் வேலவன் வெற்றி பெற்றார்.
பிரிட்டிஷ் ஜூனியன் ஓபன், ஆசிய ஜூனியர் சாம்பியன் பட்டங்களை வென்றிருந்த வேலவன், முதல் முறையாக வெல்லும் சீனியர் பட்டம் இதுவாகும். இதற்கு முன்பாக அவர் 2 உலக டூர் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை முன்னேறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வேலவன், இப்போட்டியில் தனது முதல் சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-வது இடத்தில் இருந்த ஸ்பெயினின் பெர்னாட் ஜுவாமேவை வீழ்த்தினார்.
அதன்பின்னர் காலிறுதியில் இங்கிலாந்தின் மார்க் ஃபுல்லரையும், அரையிறுதியில் சகநாட்டவரான ஆதித்யா ஜகதாப்பையும் தோற்கடித்து வாகை சூடியுள்ளார் என்பது கூடுதல் தகவல்.
