இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஆரோன் ஃபின்ச் பவுலிங்கை தேர்வு செய்தார்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் - ராகுல் ஆகிய இருவரும் களமிறங்கினர். ரோஹித் சர்மா 5 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு ராகுலுடன் கேப்டன் கோலி ஜோடி சேர்ந்தார். ராகுல் - கோலி ஜோடி சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தது. 

எனினும் கோலி அவசரப்பட்டு ஆடம் ஸாம்பாவின் பந்தை தூக்கி அடித்து ஆட்டமிழந்தார். இதையடுத்து களத்திற்கு வந்த ரிஷப் பண்ட் 3 ரன்களில் ரன் அவுட்டானார். அதன்பிறகு தினேஷ் கார்த்திக், குருணல் பாண்டியா ஆகியோர் தலா ஒரு ரன்னில் வெளியேறினர்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் சரிந்தாலும் மறுமுனையில் தோனி நிலைத்து நின்றார். ஆனாலும் தோனியால் பெரிய ஷாட்டுகளை ஆடி ரன்களை குவிக்க முடியவில்லை. முதல் 10 ஓவர்களில் 80 ரன்களை குவித்த இந்திய அணி, 20 ஓவர் முடிவில் வெறும் 126 ரன்களுக்கு இன்னிங்ஸை முடித்தது. கடைசி 10 ஓவர்களில் இந்திய அணி வெறும் 46 ரன்களை மட்டுமே எடுத்தது.

டெத் ஓவர்களில் தோனியை அடிக்கவிடாமல் ஆஸ்திரேலிய பவுலர்கள் கட்டுப்படுத்தினர். சஸ்பெண்டுக்கு பிறகு இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்த ராகுல், அபாரமாக ஆடி அரைசதம் அடித்து நல்ல கம்பேக் கொடுத்தார். அவரை தவிர வேறு எந்த இந்திய வீரரும் சிறப்பாக ஆடவில்லை.