India scored 260 runs and missed the record by 4 runs
டி-20 கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் எடுத்தால் உலக சாதனை என்ற நிலையில் 260 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் சாதனையை நழுவவிட்டது இந்திய அணி.
இலங்கை அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரை விளையாட இந்தியா வந்துள்ளது.
இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா 1-0 என்று கணக்கில் தொடரை வென்றது. தற்போது ரோஹித் சர்மா இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் இந்தியா ஒருநாள் தொடரை 2-1 என்று கணக்கில் வென்றது.
கட்டாக்கில் நடந்த முதல் டி-20 போட்டியில் இந்தியா 93 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் இரண்டாவது டி-20 போட்டி தற்போது மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள 'ஹோல்கர்' மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் இலங்கை டாஸ் வென்று, பந்து வீச முடிவு செய்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 260 ரன்கள் அடித்து 261 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இலங்கை அணிக்கு நிர்ணயித்துள்ளது.
இதில் ரோகித் சர்மா அதிகபட்சமாக 118 ரன்கள் எடுத்தார். ஏற்கனவே டி 20 போட்டியில் 263 ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்துள்ளது ஆஸ்திரேலிய அணி. இந்நிலையில், 260 ரன்கள் எடுத்து 4 ரன்கள் வித்தியாசத்தில் சாதனையை நழுவவிட்டது இந்திய அணி.
