India PV Sindhu won Silver at World Badminton Championship
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றில் விளையாடிய இந்தியாவின் பி.வி.சிந்து வெள்ளிப் பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்று நேற்று இரவு நடைபெற்றது.
இதில், இந்தியாவின் சிந்து, ஜப்பானின் நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார்.
விறுவிறுப்பாக நடைப்பெற்ற இந்த ஆட்டத்தில் 19-21, 22-20, 20-022 என்ற செட் கணக்கில் நஜோமி ஒகுஹராவிடம் வீழ்ந்தார் சிந்து.
உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் இறுதிச்சுற்றுக்கு சிந்து முன்னேறியது இதுவே முதல் முறை. இறுதிச்சுற்று வரை முன்னேறியதன் மூலம், உலக சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய 2-வது இந்தியர் என்ற பெருமையை சிந்து பெற்றுள்ளார்.
ஜகார்த்தாவில் நடைபெற்ற கடந்த சாம்பியன்ஷிப்பில் இறுதிச்சுற்று வரை முன்னேறிய முதல் இந்தியராக, சாய்னா நெவால் உள்ளார்.
இந்த உலக சாம்பியின்ஷிப் போட்டியில் இந்தியாவுக்கு சாய்னா ஒரு வெண்கலமும், சிந்து ஒரு வெள்ளியையும் வென்று தந்துள்ளனர். உலக சாம்பியன்ஷிப்பில் இந்தியா இரண்டு பதக்கங்களைப் பெறுவதும் இதுவே முதல் முறை.
