காமன்வெல்த் போட்டியின் பதக்கப் பட்டியலில் இந்தியா 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளது. 

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் புதன்கிழமை கோல்ட்கோஸ்ட் நகரில் தொடங்கின. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பல்வேறு விளையாட்டுகளில் போட்டியிடுகின்றனர். இந்தியா சார்பில் 220 பேர் கொண்ட அணி பங்கேற்றுள்ளது.

பளு தூக்குதல், ஹாக்கி, குத்துச்சண்டை, பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ் போன்றவற்றில் இந்தியா பதக்கங்கள் வெல்ல வாய்ப்பு உள்ளது என கணிக்கப்பட்டது.

இந்தப் போட்டிகளில் 5-வது நாளான நேற்ரு 10 தங்கம், 4 வெள்ளி, 5 வெண்கலம் பதக்கங்களுடன் 3-வது இடத்துக்கு இந்தியா முன்னேறியுள்ளது.

ஆஸ்திரேலியா 38 தங்கம், 32 வெள்ளி, 33 வெண்கலத்துடன் முதலிடத்திலும், இங்கிலாந்து 22 தங்கம், 24 வெள்ளி, 16 வெண்கலத்துடன் இரண்டாவது இடத்திலும் உள்ளன.

கனடா, ஸ்காட்லாந்து, நியூஸிலாந்து உள்ளிட்டவை முறையே நான்காவது, ஐந்தாவது, ஆறாம் இடங்களை வகிக்கின்றன.