India-Pakistan match will take place if the federal government approves - BCCI
அரசு அனுமதி தந்தால் மட்டுமே இந்தியா - பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் தொடர் நடக்கும் என்று பிசிசிஐ கூறியுள்ளது.
இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவும் பதற்றமான சூழ்நிலையால் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் இரு தரப்புக்கும் இடையே பரஸ்பர கிரிக்கெட் தொடர்கள் நடத்தப்படவில்லை.
மத்திய அரசு அனுமதி தராமல் தன்னால் இருதரப்பு தொடர்களில் பங்கேற்க முடியாது என்று அடிக்கடி பிசிசிஐ கூறுகிறது. இதனிடையே கடந்த 2014-ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை நிறைவேற்றவில்லை. இதனால் கடும் இழப்பு ஏற்பட்டுள்ளதாம்.
அதனால், பிசிசிஐ 70 மில்லியன் அமெரிக்க டாலர் வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பிசிபி, சர்வதேச கிரிக்கெட் குழு (ஐசிசி) தகராறுகள் தீர்ப்பாயத்தில் முறையிட்டது.
இது தொடர்பான விசாரணை விரைவில் நடக்கவுள்ளது. இந்த நிலையில் இரண்டு நாட்டு கிரிக்கெட் தொடர் தொடர்பாக மத்திய அரசின் நிலை அல்லது கொள்கை என்ன என்பது குறித்து தெளிவுபடுத்த வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளது.
