india pakistan match begins with toss

இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

சாம்பியன்ஸ் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டியைத்தான் உலக அளவில் கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் அநேக பேர் அதிகம் எதிர் பார்ப்பார்கள்.

இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை மோதிய 128 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணி 72 போட்டிகளிலும், இந்திய அணி 52 போட்டிகளிலும் வென்றுள்ளன. 4 போட்டிகளில் முடிவு கிடைக்கவில்லை.

இறுதிப் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தைப் பொறுத்தவரை 14 போட்டிகளில் இந்திய அணி 5 போட்டிகளிலும், பாகிஸ்தானைப் பொறுத்தவரை 9 போட்டிகளில் 2 போட்டிகளிலும் வென்றுள்ளது.

அதனால் ஓவல் மைதானம் கண்டிப்பாக இந்தியாவிற்கு கைகொடுக்கும் என்றே ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

சர்வதேச ஒருநாள் தொடர்களைப் பொறுத்தவரை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 10 போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில், இந்திய அணி 8 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன.

சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு இந்திய அணி 4ஆவது முறையாகத் தகுதிபெற்றுள்ளது. அதேநேரம், சாம்பியன்ஸ் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணி பங்கேற்பது இதுவே முதல்முறை.

இந்நிலையில், இந்தியா பாகிஸ்தான் இடையேயான சாம்பியன்ஸ் கோப்பை இறுதிபோட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் விராட் கோலி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.